பாரதியார் பல்கலை.யில் 17 நாட்டு மாணவர்கள்
கோவை: பாரதியார் பல்கலை.யில் 38 துறைகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் 2,434 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், நடப்பு கல்வியாண்டில் மட்டும் 1,618 புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை 1,472 ஆக இருந்தது. இந்தாண்டு 146 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். இதேபோல், நடப்பு கல்வியாண்டில் 816 பேர் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஆக., 1 நிலவரப்படி, 33 மாணவர்கள், 32 மாணவியர் என 65 சர்வதேச மாணவர்கள் 19 துறைகளில் கல்வி, ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை, தான்சானியா, மடகாஸ்கர், ஈராக், கென்யா, எத்தியோப்பியா, சிரியா, இந்தோனேசியா, உகாண்டா, மலேசியா, தென்னாப்பிரிக்கா உள்பட 17 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலையில் படிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இருண்டு போயிருந்த...முதியோரின் வாழ்வில் ஒளி!
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
Advertisement
Advertisement