கோவையில் இருந்து 5 பேர் சென்றனரா?
கோவை: கோவையில் இருந்து நேபாளத்திற்கு 5 பேர் சுற்றுலா சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 36 பெண்கள் உட்பட 57 பேர் சிக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கோவையில் இருந்து 5 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு, சுற்றுலா சென்றவர்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டத்திற்கு சென்றுள்ளனரா; அவர்களின் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும், கடந்த சில வாரத்திற்கு முன் கோவை மாவட்டத்தில் இருந்து நேபாளத்திற்கு சென்றுள்ளவர்களின் விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, புலம்பெயர் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணையர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.