ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நாளை 29ம் தேி சிறப்பு முகாம்

விழுப்புரம்: மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவு செய்ய நாளை 29ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.

கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகளின் ஆதார் விபரங்களை சரிபார்ப்பதற்காக ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை கைரேகை பதிவு மேற்கொள்ளாத ரேஷன் கார்டுதாரர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நாளை 29ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளிலும் நடக்கும் சிறப்பு முகாமை பயன்படுத்தி கைரேகை பதிவை உறுதிப்படுத்தி கொள்ளலாம்.

மேலும், கைரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் வெளியூரில் அல்லது வெளி மாநிலத்தில் வசித்து வந்தாலும், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளில் தங்களது கைரேகை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement