சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.86 லட்சம் பறிமுதல்
மதுரை: மதுரை மாவட்டம் செட்டிக்குளம் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.86 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை ஊமச்சிக்குளத்தில் உள்ள இந்த அலுவலகத்தில் நேற்று மதியம் 3:15 முதல் இரவு 7:30 மணி வரை லஞ்சஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயப்ரியா, ரமேஷ்பிரபு, குமரகுரு சோதனையில் ஈடுபட்டனர். கேமரா ஆபரேட்டர் முத்துமணியிடம் 35, இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பொறுப்பு சார்பதிவாளர் ராஜன் 40, என்பவருக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.1.83 லட்சம் பத்திர எழுத்தர்கள் சந்தோஷ்பாலாஜி 27, சிராஜூதீன் 30, அருண்பாண்டி 26, வெங்கடேசன் 37, பிரேம்குமார் 58, ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிர்கிஸ்தானில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறார் பிரதமர் மோடி
-
இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
நேபாளத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 63 பேர் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
-
இக்கட்டான சூழ்நிலையில் உதவி; இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்
-
நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ஏரியின் பெயரை மாற்றினார் டிரம்ப்; கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு
Advertisement
Advertisement