கோயில் நிலம் மோசடி    ஜாமின் மனு தள்ளுபடி 

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சேவை செய்ய அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்பு நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம், பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்ததாக முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் வி.ஏ.ஓ., அரசன் உட்பட 19 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான அரசன், இளையராஜா மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி சாய்சரவணன் விசாரித்தார்.

அரசு வழக்கறிஞர் பாண்டி: அரசன், அன்பழகன், இளையராஜா ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் கோயில் நிலம் என தெரிந்தே விற்பனை முன்பணம் வாங்கியுள்ளனர். ஜாமின் அனுமதிக்கக்கூடாது என்றார். நீதிபதி இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

Advertisement