மாணவர்களிடம் நல்லிணக்கம்: போலீசார் அறிவுறுத்தல்
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட கல்லுாரிகளில் ராக்கிங், மாணவர்கள் மோதல், போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது, முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக கல்லுாரி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
டி.எஸ்.பி.,க்கள் கார்த்திக், சங்கர், குமரேசன் பங்கேற்று மாணவர்களுக்கு நடக்கும் துன்புறுத்தல், அச்சுறுத்தல் குறித்து கல்லுாரி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். நல்லிணக்கம், சகோதரத்துவம், ஒற்றுமையை வளர்க்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.
கலை,அறிவியல், இன்ஜினியரிங், நர்சிங் உள்பட பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 82 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோயில் நிலம் மோசடி ஜாமின் மனு தள்ளுபடி
-
மதுரை - செங்கோட்டை ரயில் பகுதி ரத்து
-
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.86 லட்சம் பறிமுதல்
-
மத நம்பிக்கையில் முடிவளர்க்கும் கைதி அகற்ற வற்புறுத்த தடை கோரி வழக்கு விதிகளை பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
-
மதுரையில் ரூ.58.65 லட்சம் அரசு இழப்பீடு தொகை கையாடல்: பெண் ஊழியர் கைது
-
மண் லாரியை விரட்டி வீடியோ எடுத்த தாசில்தார்
Advertisement
Advertisement