காட்டு யானை தாக்கி முதியவர் பலி

மூணாறு: பூப்பாறை அருகே தலக்குளத்தில் காட்டு யானை தாக்கி போடி, மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்த ஓச்சப்பன் 68, இறந்தார். அவர் நேற்று தலக்குளத்தில் உள்ள மகளின் ஏலத்தோட்டத்தை பார்க்க வந்தார். அப்போது காலை 8:30 மணிக்கு ஏலத்தோட்டத்தினுள் காட்டு யானையிடம் சிக்கினார். காட்டு யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். ஓச்சப்பனை தாக்கிய யானை பலமாக பிளிறியதால், அருகில் ஏலத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வந்து பார்த்தபோது தன்னை காட்டு யானை தாக்கியதாக கூறினார். பலத்த காயம் அடைந்தவரை தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

Advertisement