'இன்ஸ்டா'வில் கலக்கும் மத்திய அமைச்சர்கள்

-- சிறப்பு நிருபர் -

பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று, 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில், 97 சதவீத மத்திய அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளனர்.


நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மத்திய அரசின் திட்டங்களை சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்லும்படி, பிரதமர் மோடி தன் அமைச்சரவை சகாக்களுக்கு சமீபத்தில் அறிவுறுத்தினார். இதற்கு உதாரணமாக, 'எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' போன்ற சமூக ஊடகங்களில், அரசின் திட்டங்கள் குறித்து அவ்வப்போது அவர் வீடியோ வெளியிட்டு வருகிறார். இளம் தலைமுறையினரை கவரும் நோக்கில் இந்த புது உத்தியை அவர் மேற்கொண்டுள்ளார்.


இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று, இன்ஸ்டாகிராமில் மத்திய அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ள விபரம் தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த 24 நிலவரப்படி, 29 கேபினட் அமைச்சர்களில், 28 பேர், படுதீவிரமாக இன்ஸ்டாகிராமில் செயல்பட தொடங்கி உள்ளனர்.

கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை தவிர, மற்ற அமைச்சர்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வருகின்றனர். பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை, கடந்த ஒரு மாதத்தில், இன்ஸ்டாகிராமில், புதிதாக, 8.53 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். ஒரு மாதத்தில் மட்டும், 1,179 பதிவுகளை மத்திய அமைச்சர்கள் வெளியிட்டுள்ளனர். இது முந்தைய மாதத்தை விட, 48 சதவீதம் அதிகம்.

Advertisement