திருமண வரவேற்பு விழா வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருமண வரவேற்பு விழாவிற்கு சென்றவர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த மழவராயனுாரை சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி லட்சுமி, 43; இவரது மகன் கவியரசன் திருமண வரவேற்பு விழா கோலியனுாரில் நேற்று முன்தினம் நடந்தது.

இதற்காக வீட்டை பூட்டிவிட்டு, லட்சுமி தனது குடும்பத்துடன் திருமண மண்டபத்திற்கு சென்றுவிட்டார். பின், இரவு 11:00 மணிக்கு திரும்பிவந்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த ஐந்தேகால் சவரன் நகைகள் மற்றும் 130 கிராம் வெள்ளி, 5,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement