மாவட்டத்தில் மீண்டும் ரோந்து பணி எஸ்.பி., அதிரடி நடவடிக்கை
கடலுார், ஆக. 29–
‘தினமலர்’ செய்தி எதிரொலியால், மாவட்டத்தில் போலீஸ் இரவு ரோந்து பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் போலீசார் இரவு ரோந்துப்பணி நிறுத்தியதால் ஆங்காங்கே கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ‘தினமலரில்’ செய்தி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எஸ்.பி., விவேகானந்த சுக்லா, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், போலீசார் நடந்து சென்று ரோந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அதன்படி, கடலுாரில் இன்ஸ்பெக்டர்கள் இளவரசி, ஏழுமலை புவனகிரியில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், பெண்ணாடத்தில் இன்ஸ்பெக்டர் சரவணன், சிதம்பரத்தில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று இரவு கடைவீதிகள் மற்றும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் நடந்து சென்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட ‘பார்க்கிங்’ இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தினர்.
மேலும்
-
லைட் ரீடிங்... களைகட்டிய கலைத்திருவிழா போட்டிகள் இசை, நடனம், நாடக திறமைகளை வெளிப்படுத்தி பள்ளி மாணவர்கள்
-
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு சேவை உரிமை ஆவண திட்டம் செப். 1ல் அமல்
-
கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
-
டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; இருவர் காயம்
-
2 மாதங்களில் 731 சாலை விபத்து 1,204 பேருக்கு அவசர சிகிச்சை
-
டவுன் பஸ் இயக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்