வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் எதிரில் வங்கி ஊழியர்கள்: அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வங்கித் துறையில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்பதை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மந்தாரக்குப்பம்:

நெய்வேலி இந்தியன் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெய்வேலி தாலுகா வங்கி ஊழியர் சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் வேல்ராஜ் , ராமகிருஷ்ணன், அருள்மொழி, பாஸ்வான், ஹேமதி, விஜயபாரதி, அரபி, பரமேஸ்வரி, கிருஷ்ணபிரியா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மோகன்ராஜ் நன்றி கூறினார்.



Advertisement