பெருவெள்ளத்தை எதிர்த்து நின்ற மாடி வீடு; நேபாள இன்ஜினியருக்கு சபாஷ் போடும் நெட்டிசன்கள்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
-நமது சிறப்பு நிருபர்-
நேபாள பெருவெள்ளத்தில் சுற்றியுள்ள அனைத்து கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும், ஒரே ஒரு மாடி வீடு மட்டும் கம்பீரமாக உறுதியுடன் நின்ற நிகழ்வின் வீடியோ உலகளவில் வைரலாகி வருகிறது.
நேபாளத்தை சூறையாடிய பெருவெள்ளத்தால், கிராமங்களும் வீடுகளும் முற்றிலுமாக அழிந்து, அந்நாடு தத்தளித்து வருகிறது. ஆற்றில் வந்த நீரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், வலுவான பல வீடுகளும் பாலங்களும் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. நுவாகோட் மாவட்டத்தில் வெள்ளத்தில் அனைத்துக் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட போதும், ஒரு மாடி வீடு மட்டும் இடியாமல் கம்பீரமாக நின்றது.
சுற்று வட்டாரப்பகுதிகளில், அந்த மாடி வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர். பால்கனியில் அந்த குடும்பத்தினர் நின்று வெள்ளத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உலக அளவில் கவனம் பெற்றது. சுற்றியுள்ள கான்கிரீட் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் சரிந்தபோது, இந்த ஒரு வீடு மட்டும் தப்பியதற்கு அதன் கட்டுமானப் பலமே காரணமாக கருதப்படுகிறது.
நீரோட்டத்தின் திசைக்கு ஏற்பவும், நீரின் அழுத்தத்தைத் தாங்கும் விதத்திலும் இதன் தூண்கள் மற்றும் சுவர்கள் தரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. சிமெண்ட் மற்றும் கம்பிகளின் தரம், கலவையின் சரியான விகிதம் ஆகியவை வெள்ளத்தின் இழுவையை தாங்கி கம்பீரமாக நின்றுள்ளது. இது பற்றி பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை வைரல் செய்து வரும் நெட்டிசன்கள் அந்த வீட்டை கட்டிய இன்ஜினியரை பாராட்டி வருகின்றனர்.
வாசகர் கருத்து (7)
Vasan - ,இந்தியா
29 ஆக்,2026 - 14:54 Report Abuse
2025ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி அகமதாபாத் = லண்டன் ஏர் இந்தியா விமான 11-ஏ இருக்கை பிரயாணி போல, இந்த வீட்டுக்காரரும், அவரது குடும்பத்தினரும், இறைவனால் உயிர் பிச்சை அளிக்கப்பட்டவர்கள். வாழ்த்தி வணங்குகிறேன். 0
0
Reply
Pandi Muni - Johur,இந்தியா
29 ஆக்,2026 - 14:00 Report Abuse
நல்ல வேலையா திராவிட என்ஜினீயர் அந்த ஊர் பக்கமே போகலயாம் 0
0
Reply
ராமகிருஷ்ணன் பரமக்குடி - ,
29 ஆக்,2026 - 13:39 Report Abuse
அந்த வீட்டை காட்டியவர்கள் திமுகவின் கான்ட்ராக்டர்கள், புரோக்கர்கள் இல்லை என்று தெரிகிறது. 0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
29 ஆக்,2026 - 13:24 Report Abuse
என்னது ? சமச்சீர் கல்வி அங்கே பின்பற்றப்படவில்லையா ? 0
0
Reply
DHURANDHAR - Nellai,இந்தியா
29 ஆக்,2026 - 12:58 Report Abuse
இந்த வீட்டை கட்டிய எஞ்சினியர் தனது தொழிலுக்கு மிகவும் உண்மையாக மிகவும் சிரத்தையுடன் நேர்த்தியாக, உறுதியான வீட்டை கட்டி இதுதான்டா வீடு, இதுதாண்டா இன்ஜினியரிங் என்று உலகில் உள்ள கட்டுமான தொழிலில் உள்ளவர்களுக்கெல்லாம் அறைகூவல் விடுத்துள்ளார். 0
0
Reply
needhi rajan - ,இந்தியா
29 ஆக்,2026 - 12:37 Report Abuse
சிறந்த பொறியாளர் ...அவருக்கு வாழ்த்துக்கள் 0
0
Reply
ராஜா தென்காசி - ,
29 ஆக்,2026 - 12:22 Report Abuse
உண்ணாமை என்னன அந்த இடத்தில் மட்டும் நீரின் போக்கு சற்று திசை மாறியபடி சென்றது 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement