கார் மீது பைக் மோதல் :வாலிபர் சாவு 

வானுார்: கிளியனுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் முருங்கை கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 33; இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேலையை முடித்து விட்டு, புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலை, வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கிளியனுார் அடுத்த மொளசூர் சந்திப்பில் சென்றபோது, பின்பக்கமாக வந்த கார், முருகன் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது.

அதில் துாக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கிளியனுார் போலீசார் அங்கு சென்று,

இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement