உழவர் சந்தை அருகே கடை அமைத்தால் நடவடிக்கை
கோவை: சிங்காநல்லுார் உழவர் சந்தையில் 144 கடைகள் உள்ளன. சந்தையின் வெளியே ரோட்டோரங்களில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களிலும், தரை கடைகள் அமைத்தும் வியாபாரிகள் சிலர் காய்கறி விற்பனை செய்கின்றனர்.
இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக உழவர் சந்தைக்குள் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
போலீசார் பேசி ஒரு வாரத்துக்குள் கடைகள் அகற்றப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
விவசாயிகளிடம், வேளாண் துணை இயக்குனர் ஷீலா பூசலட்சுமி அளித்த கடிதத்தில், ‘ஆக்கிரமிப்பு குறித்த புகார் தொடர்பாக போலீசாருக்கும், மாநகராட்சிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இனிமேல் உழவர் சந்தையில் இருந்து 100 மீ.,க்கு தொலைவில் வெளிக்கடைகள் அமைக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தெரிவித்துள்ளார்.
சிங்காநல்லுார் உழவர் சந்தை உழவர் நல சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ‘‘வெளிக்கடைகளை முழுமையாக அகற்ற போலீசார், மாநகராட்சி நிர்வாகத்தினர் ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளனர்,’’ என்றார்.
மேலும்
-
தொடரை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வி
-
'கவுன்டி' அணியில் அகிப் நபி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக
-
கிழக்கு மண்டல அணி அபாரம்: துலீப் டிராபி அரையிறுதியில்
-
இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
-
ஜெர்மனி மீண்டும் சாம்பியன்: உலக கோப்பை ஹாக்கியில் கலக்கல்
-
பெடரருக்கு கவுரவம்: 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்