விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்
கடலுார்: கடலுாரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரமாண்ட சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்., 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் கடலுார் மாவட்டம் முழுவதும், வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்களிலும், சிறியது முதல் பெரியது வரை பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதற்கான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், கடலுார் சாவடி பகுதியில், சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள், கிழங்கு மாவு, களிமண் ஆகியவற்றால் தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வடிவங்களில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள், கடலுார் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். சிலை தயாரிப்பு பணியில், மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
-
இருண்டு போயிருந்த...முதியோரின் வாழ்வில் ஒளி!
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்