மயிலை, கே.கே.நகரில் நடக்குது செப்., 1ல் மின் குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்துார், கே.கே.நகரில் செப்., 1ம் தேதி காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

* மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலைய வளாகம், எண் 97, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை.

* அம்பத்துார்: செயற்பொறியாளர் அலுவலகம், 3வது மெயின் ரோடு, துணைமின் நிலைய வளாகம், அம்பத்துார் தொழிற்பேட்டை.

* தண்டையார்பேட்டை: செயற்பொறியாளர் அலுவலகம், எண் 805, டி.எச்.ரோடு, மணிக்கூண்டு எதிரில், தண்டையார்பேட்டை.

* கே.கே.நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், இரண்டாவது தளம், 110 கி.வோ., கே.கே.நகர் துணைமின் நிலைய வளாகம், அண்ணா மெயின் ரோடு, கே.கே.நகர்.

மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில் மயிலாப்பூர், கே.கே.நகர், அம்பத்துார், தண்டையார்பேட்டையில் வசிக்கும் மக்கள் பங்கேற்று மின் தடை, அதிக மின் கட்டணம் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

Advertisement