விவசாயிகள் சங்க மாநாடு

மானாமதுரை:மானாமதுரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் மாரிமுத்து கொடியேற்றினார்.

மாவட்ட துணை தலைவர் அழகர்சாமி, தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டி, விஸ்வநாதன் அறிக்கை சமர்பித்தனர். அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். பெரியார் பாசன திட்டத்திற்கு மறவமங்கலம் விரிவாக்கப் பகுதிகளுக்கு தண்ணீர் வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் காப்பீட்டுத் திட்டம் தனியார் இன்சூரன்ஸ்க்கு வழங்கப்படாமல் அரசே இன்சூரன்ஸை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் சேதுராமன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மாநில துணைத்தலைவர் முத்துராமு பங்கேற்றனர். ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம் நன்றி கூறினர்.

Advertisement