கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பதக்கங்கள் குவித்த மாணவர்கள்
கோவை: ஜப்பான் கராத்தே அசோசியேஷன்(இந்தியா) சார்பில் 18வது ஜே.கே.ஏ., மழைக்கால பயிற்சி முகாம் மற்றும் முதலாவது பள்ளிகளுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது.
இதில், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர். மாணவர் கிஷாந்த் கட்டா பிரிவில் தங்கம், குமிட்டே பிரிவில் வெள்ளியும், நவீன் கட்டா பிரிவில் வெண்கலம், குமிட்டேவில் வெள்ளி வென்றனர்.
சமர்த் கட்டாவில் தங்கம், சுதர்சனா கட்டா மற்றும் குமிட்டேவில் தங்கம், செந்துார விஷாகன் கட்டாவில் வெள்ளி, குமிட்டேவில் வெண்கலம், யுவதி கட்டா மற்றும் குமிட்டேவில் வெள்ளியும் வென்றுள்ளனர். வித்தேஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். வெற்றி பெற்றவர்களை சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடரை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வி
-
'கவுன்டி' அணியில் அகிப் நபி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக
-
கிழக்கு மண்டல அணி அபாரம்: துலீப் டிராபி அரையிறுதியில்
-
இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
-
ஜெர்மனி மீண்டும் சாம்பியன்: உலக கோப்பை ஹாக்கியில் கலக்கல்
-
பெடரருக்கு கவுரவம்: 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்
Advertisement
Advertisement