மானாமதுரையில் களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பு

மானாமதுரை:மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்களால் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத களிமண்ணாலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பானை, கூஜா, சமையலுக்கு தேவையான பொருட்கள், சிலைகள், முளைப்பாரி ஓடு, கஞ்சி கலயங்கள், நவராத்திரியில் வைத்து வழிபடும் கொலு பொம்மைகள் தயாரித்து வருகின்றனர். இங்கு விநாயகர் சதுர்த்திக்காக அரை அடி முதல் 12அடி வரை களிமண்ணாலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. செப்.14ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாகவே மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய விநாயகர் சிலைகள் ரூ. 10 முதல் ரூ. 300 வரை விற்கப்படுகிறது. அதேபோன்று கோயில்கள் மற்றும் பொது இடங்கள், தெருக்களில் வைத்து வழிபடக்கூடிய 3 அடியிலிருந்து 12அடி வரையிலான விநாயகர் சிலைகளும் ரூ.5ஆயிரத்திலிருந்து ரூ.45ஆயிரம் வரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது, விநாயகர் சிலைகள் களிமண் மற்றும் வைக்கோலை கொண்டு சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும், நீர் நிலையில் எளிதாக கரையும் வகையிலும் தயாரிக்கப்படுவதால் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். கடந்த 2 மாதங்களாக ஏராளமானோர் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

////

Advertisement