வீணாகிறது குடிநீர்; அதிகாரிகள் பாராமுகம்
கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் அவிநாசி ரோட்டில் தண்டுமாரியம்மன் கோயிலில் இருந்து பி.எஸ்.ஜி. கலை கல்லுாரி வரை குழாய் பதிக்கின்றனர். குழாய் பதிக்க தோண்டிய இடங்களை இன்னும் சீரமைக்கவில்லை. இணைப்பு கொடுத்த பகுதியில் கசிவு ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது.
அண்ணாதுரை சிலை சந்திப்பு இண்டியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே தனியார் வங்கி முன் கசிவு ஏற்பட்டு குடிநீர் சாக்கடை கால்வாயில் கலக்கிறது. அப்பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. மின் புதை வடம் பதிக்கப்பட்டிருக்கிறது.
குப்புசாமி நாயுடு புதிய மருத்துவமனை அருகிலும் கசிவு ஏற்பட்டுள்ளது. குழி தோண்டிய இடங்களில் சாக்கடை போல் கறுப்பு நிறத்தில், தண்ணீர் தேங்கியுள்ளது.
மக்கள் புகார் தெரிவித்து 7 நாளாகியும் தண்ணீர் தொடர்ந்து ரோட்டில் ஓடுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடரை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வி
-
'கவுன்டி' அணியில் அகிப் நபி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக
-
கிழக்கு மண்டல அணி அபாரம்: துலீப் டிராபி அரையிறுதியில்
-
இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
-
ஜெர்மனி மீண்டும் சாம்பியன்: உலக கோப்பை ஹாக்கியில் கலக்கல்
-
பெடரருக்கு கவுரவம்: 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்
Advertisement
Advertisement