சாலை விபத்தால் போக்குவரத்து பாதிப்பு  

மயிலம்: மயிலம் அருகே உள்ள செண்டூர் தொண்டியாற்று பாலம் அருகே அடுத்தடுத்து நடந்த விபத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து சிவகாசிக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி மயிலம் அருகே உள்ள பாலப்பட்டு தொண்டியாற்று பாலம் அருகே அதிகாலை 4:00 மணியளவில் சென்ற போது, நிலை தடுமாறி சென்டர் மீடியனில் ஏறி எதிர்திசையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் முருகன் 45; என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக அரசு பஸ் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து பெரம்பலுாருக்கு சென்று கொண்டிருந்தது.

 டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சென்டர் மீடியாவில் ஏறி எதிர் திசையில் சென்று நின்று விட்டது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மேலாத்துாரை  சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ் 21; என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இவரை போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு  வந்த இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்

Advertisement