‘சித்தேஷ் பியூல்ஸ்’ பெட்ரோல் பங்க் திறப்பு விழா

திண்டுக்கல், செப்.2

திண்டுக்கல் – வேடசந்துார் பைபாஸ் ரோடு கள்ளிப்பட்டி பிரிவில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் ‘சித்தேஷ் பியூல்ஸ்’ புதிய பெட்ரோல் பங்க்  திறப்பு விழா நடந்தது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பாஸ்கரன், கார்த்திகாதேவி திறப்பு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றனர்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சில்லரை வணிகப்பிரிவின் மதுரை மண்டல அலுவலக முதன்மை விற்பனை அலுவலர் ஈஸ்வர் ஐயர், உரிமையாளர் சித்தேஷ் பிரணவ் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முதல் விற்பனையை உடுமலைப்பேட்டை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மணியன் துவக்கி வைத்து வாழ்த்தினார்.

விழாவில் எஸ்.எஸ்.எம்., மில்ஸ் நிர்வாகி சண்முகவேல், அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், ஆர்க்கிடெக்ட் கருணாகரன், ரோட்டரி கிளப் தலைவர் மதனமுனியப்பன், திண்டுக்கல் கொங்கு சங்கத்தின் தலைவர் தமிழ்செல்வன், பி.என்.ஐ., உறுப்பினர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

சித்தேஷ் கார்ஸ், பிரணவ் கார்ஸ், சித்தேஷ் ஆட்டோ ஸ்பேர்ஸ், சித்தேஷ் ஆட்டோ அக்சஸரிஸ் நிறுவனங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பலர் பங்கேற்றனர். 

Advertisement