வீடு புகுந்து பிரோவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை திருநாவலுார் அருகே பட்டப்பகலில் துணிகரம்

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து வீட்டின் பீரோவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை போனது சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துள்ளது..

உளுந்துார்பேட்டை தாலுகா கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் செந்தில்குமார், 45; விவசாயி. இவர், நேற்று காலை 9 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை மேல் பகுதியில் வைத்து விட்டு வயலுக்கு சென்றிருந்தார்.

பின்னர் காலை 11.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு இல்லாமல் உள்பக்கமாக கதவு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததும், பின் வாசல் கதவு திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து நேற்று இரவு 8 மணி வரை புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளைபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement