கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது நல்ல முயற்சியா? பெல்டக்ஸ், செயின் லிங்க் சரியான வழியா?
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது நல்ல முயற்சி இல்லை. அபாயம் அதிகம். அது பாதுகாப்பான 'முதலீடு' கிடையாது. அது 'ஊக வணிகம்'. இதில் பங்குகள், தங்கம், மனை போல எந்த அடிப்படை சொத்தும் கிடையாது. நம் நாட்டில் கிரிப்டோகரன்சி, ரூபாய் போல சட்டப்பூர்வமான நாணயமாக அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பும் மிகவும் குறைவு. இதில் லாபம் வந்தால் 30 சதவீத வரியும், கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்கு டி.டி.எஸ்., விதிகளும் உள்ளன.
செயின் லிங்க் :
ஆரக்கிள் நெட்வொர்க்கில் இருப்பதால் கிரிப்டோ சந்தையை பொறுத்தவரை இதற்கு உண்மையான தொழில்நுட்ப பயன்பாடு உள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடையும்போது இதுவும் கடுமையான சரிவை சந்திக்கும்.
பெல்டக்ஸ் :
இந்த காயினில் பணம் போடுவதை கண்டிப்பாகத் தவிருங்கள். சமீபகாலமாக தமிழகத்தில் பல இடங்களில் இது எம்.எல்.எம்., முறையில், 'நிச்சயம் லாபம் வரும்' என ஆசை காட்டி விற்கப்படுகிறது. நிதிச்சந்தையில் இப்படி நெட்வொர்க் மார்க்கெட்டிங் முறையில் விற்கப்படும் எந்தவொரு திட்டமும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வளர்க்க விரும்பினால், பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் பண்டு பக்கம் செல்லுங்கள். போட்ட பணம் முழுவதும் அழிந்தாலும் பரவாயில்லை என அதிக ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால் மட்டுமே, இந்த பக்கம் தலைவைத்து படுங்கள்.
என் பங்குகளையும் அதற்கான டிவிடெண்டுகளையும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்துக்கு அனுப்பி விட்டதாக ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி அனுப்புவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், பங்குதாரருக்கு நோட்டீஸ் அனுப்பி விபரம் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த குறிப்பிட்ட நிறுவனம் அதை செய்யவில்லை. இதை எதிர்த்து எங்கே நான் புகார் செய்ய வேண்டும்?
www.beldex.ai
இப்போலாம் ஷேர் மார்க்கெட் ல இன்வெஸ்ட்மென்ட் பண்ணுரதுக்கும் இதுக்கும் பெரிய வேறுபாடு இல்லை சார்..
முன்னாடிலாம் ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் ல லொஜிக்ஸ் இருந்துச்சு இப்போ ரெண்டுமே ஸ்பெகுலேஷன் தான்
இது அடுத்த புது டிசைன். எப்போது பணத்தை சுருட்டி கொண்டு ஓடி போவான் என்பது கடவுளுக்கு தான் தெரியும். தமிழக அரசு இது போன்ற நிறுவனங்களை பொருளாதார காவல் துறை மூலம் கைது செய்வது நல்லது. சில ஆயிரம் கோடி, மக்களின் கைகளில் இருந்து விரைவில் காணாமல் போகும்.மேலும்
-
நீட் போராட்டக்காரர்கள் மீதான எப்ஐஆர்கள் ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு
-
நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டு சிறை
-
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன உறவுகள்: தேடி செல்வோருக்கு உதவ தமிழக அரசு சிறப்புக் குழு அறிவிப்பு
-
படகு கவிழ்ந்து விபத்து:159 பேர் உயிருடன் மீட்பு
-
எரிபொருள் தட்டுப்பாடு:கைகொடுத்த இந்தியா
-
இந்துகுஷ் மலைதொடரில் மிதமான நிலநடுக்கம்