படகு கவிழ்ந்து விபத்து:159 பேர் உயிருடன் மீட்பு
நிக்கோசியா:மேற்காசிய நாடான சைப்ரசின் வடக்கு பகுதி கடற்கரையில் இருந்து 270 பயணியருடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வடக்கு சைப்ரசில் உள்ள கிரினீயா துறைமுகத்தில் இருந்து, மற்றொரு மேற்காசிய நாடான துருக்கியின் மெர்சின் மாகாணம் நோக்கி நேற்று பயணியர் படகு சென்றது. 270 பேருடன் சென்ற இந்த படகிற்குள் திடீரென கடல்நீர் புகுந்தது. இதனால் தள்ளாடியபடி படகு கடலில் மூழ்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு பலரை காப்பாற்றியுள்ளனர். முதற்கட்டமாக, 159 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்ரீசத்ய சாய் சேவா – சாஸ்த்ரா பல்கலை நடத்தும் இலவச தொழிற் பயிற்சி
-
கடலுாரில் காங்., ஆர்ப்பாட்டம்
-
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு இறுதி மெரிட் லிஸ்ட் வெளியீடு போலி சான்றிதழ் கொடுத்த மாணவர்கள் நீக்கம்
-
காஸ் ஏஜென்சிகள் நுாதன மோசடி சிலிண்டர் விநியோகத்தில் ‘தில்லாலங்கடி’
-
என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்
-
ரத்தினம் குளோபல் நிகர்நிலை பல்கலையில் ஒப்பந்தம்
Advertisement
Advertisement