எரிபொருள் தட்டுப்பாடு:கைகொடுத்த இந்தியா
மாஸ்கோ:ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் நடத்திய தொடர் தாக்குதல்களால், எரிபொருள் உற்பத்தி 70 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. இதையடுத்து, எரிபொருள் இறக்குமதி செய்யும் நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், ரஷ்யாவுக்கு பெட்ரோல் வழங்கும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் 10 லட்சம் பேரல்கள் பெட்ரோலை ரஷ்யாவுக்கு வழங்கியுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குஜராத்தின் வதினார் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து எரிபொருள் ஏற்றுமதியாகி உள்ளது. இந்த ஆலையை நயாரா எனர்ஜி நிறுவனம் இயக்குகிறது. இந்நிறுவனத்தின் பாதி பங்கு ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement