வெள்ளத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 900ஐ கடந்தது; பேரழிவு குறித்து நேபாள பிரதமர் வேதனை

1


காத்மாண்டு: நேபாளத்தில் திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900ஐத் தாண்டியது; நாடு நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவைச் சந்தித்து வருவதாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வேதனையுடன் தெரிவித்தார்.

நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால், சகதி மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி, ஒரு புதிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. போதேகோஷி ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நேபாளத்தில் நிலைமை தொடர்ந்து மோசமாக இருப்பதாலும், உயிரிழப்பு அதிகரித்து வருகிறது; நாடு கற்பனை செய்ய முடியாத மற்றும் நெஞ்சை உலுக்கும் ஒரு பேரழிவைச் சந்தித்து வருகிறது என நேபாள பிரதமர் பாலேந்திர ஷா கூறியுள்ளார்.

Advertisement