நீலகிரி வனத்தில் பூத்துக்குலுங்கும் வெள்ளைக்குறிஞ்சி மலர்கள்
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் ஜீன்பூல் தாவரவியல் மையத்தில், குறிஞ்சி பூக்கள் மீண்டும் பூத்துக் குலுங்குவதுடன், அரிதான வெள்ளை குறிஞ்சியும் பூத்துள்ளது பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய செய்து உள்ளது.
உலக அளவில் 250க்கும் மேற்பட்ட குறிஞ்சிப்பூ வகைகள் உள்ளது. இதில் இந்தியாவில் 46 வகைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் 60க்கும் மேற்பட்ட வகை குறிஞ்சி பூக்களும் உள்ளது. இதில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி புகழ்பெற்ற குறிஞ்சி வகையாகும்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டமாக பூக்கும் தன்மை கொண்ட இந்த வகை பூக்கள், நீலகிரி மாவட்டம் ஜீன்பூல், ஓவேலி மலைப்பகுதிகள், ஊசிமலை பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பூத்தது. தொடர் மழை காரணமாக குறிஞ்சி பூக்கள் அழுகி, பசுமை புல்வெளியாக மாறியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலான காலநிலை நிலவி வருவதால், மீண்டும் இந்த பகுதியில் குறிஞ்சி பூக்கள் பூக்க துவங்கி, பசுமை புல் வெளி ஊதா நிறப் புல்வெளியாக மாறி வருகிறது. இவற்றிற்கு மத்தியில் "ஸ்டாபிலாந்தஸ்" எனும் தாவரவியல் பெயர் கொண்ட அரிய வகையான வெள்ளை குறிஞ்சி பூக்களும் பூத்துள்ளது.
இயற்கையின் சூழலுக்கு ஏற்ப மாறுபட்ட காலங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே இவை பூக்கும். நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மட்டுமே இவை காணப்படும். முதன் முதலில் முக்கூர்த்தி மலைப் பகுதியில், ஒரு சில பூக்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டது. தற்போது இந்தப் பகுதியிலும் பூத்துள்ளது தாவர ஆய்வாளர்களை மகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.
இது குறித்து கூடலூர் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன் கூறுகையில், பல்வேறு ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ள இடமாக உள்ளது ஜீன்பூல் தாவரவியல் மையம். அழிந்து வரும் தாவரங்களை பாதுகாத்து வரும் நிலையில், மேலும் மெருகூட்ட நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகிறது. இவற்றிற்கு மத்தியில் அரிய வகை வெள்ளை குறிஞ்சியும் பூத்துள்ளது அரிதாக உள்ளது.
இதனைப் பார்த்து ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர, பிடுங்கி செல்வதை தவிர்க்க வேண்டும். கோடை காலங்களில் காட்டுத் தீ வைப்பது மற்றும் வனங்களை அழிப்பது கொண்டு செயல்களை கட்டுப்படுத்தினால், இது போன்ற பல அறிய பூக்கள் மற்றும் தாவரங்களை பாதுகாக்க முடியும், என்றார்.
மேலும்
-
நீட் போராட்டக்காரர்கள் மீதான எப்ஐஆர்கள் ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு
-
நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டு சிறை
-
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன உறவுகள்: தேடி செல்வோருக்கு உதவ தமிழக அரசு சிறப்புக் குழு அறிவிப்பு
-
படகு கவிழ்ந்து விபத்து:159 பேர் உயிருடன் மீட்பு
-
எரிபொருள் தட்டுப்பாடு:கைகொடுத்த இந்தியா
-
இந்துகுஷ் மலைதொடரில் மிதமான நிலநடுக்கம்