சீன அதிபருடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி
பிஷ்கெக்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.
கிர்கிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கிர்கிஸ்தான் அதிபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டின் இடையே, பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இம்மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் கைக்குலுக்கிய பிரதமர் மோடி, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது, ரஷ்ய அதிபர் புடினும் அருகில் இருந்தார்.
இம்மாத இறுதியில் பிரிக்ஸ் அமைப்பு மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்த நிலையில், இருவரும் சந்தித்தனர். பிரிக்ஸ் மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்க ஆதரவு அளிப்பதாக ஷி ஜின்பிங் தெரிவித்து இருந்தார். மேலும் இம்மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.
@block_B@
வைரல்
இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருடன் பிரதமர் மோடி ஒரே நேரத்தில் கைகுலுக்கி சிறிது நேரம் பேசினார். மூன்று தலைவர்களும் ஒரே நேரத்தில் கையை பிடித்து பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.block_B
வாசகர் கருத்து (7)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
01 செப்,2026 - 20:48 Report Abuse
சீனா அதிபருடன் மோடி கை குலுக்கி அருகில் ரஷ்ய அதிபர் புடின் நிற்பதை பார்த்தால் அமெரிக்க அதிர் டிரம்புக்கு கோபமான கோபம் வருதாம் இனி அவர் என்ன செய்வார் என்றே யாருக்கும் தெரியவில்லையாம் எப்படியாவது இந்தியாவில் விரைவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் சீனா அதிபர் கலந்து கொள்ளத்தப்படி எதோ தந்திரம் செய்ய போகிறாராம் அது என்னவென்று யாருக்கும் தெரியாதாம் 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
01 செப்,2026 - 18:55 Report Abuse
அடுத்த அல்ல, தற்போதைய சூப்பர் பவர் சீனா தான். சீன பொருளாதாரம் அதை தான் நிரூபிக்கிறது. அமெரிக்காவின் வெற்று பேப்பர் டாலர் அல்லது நாமினல் ஜிடிபி உண்மையான நிரந்தரமான பொருளாதாரத்தை காட்டாது. அதன் உற்பத்தி துறையே அதன் வல்லமையை காட்டும். வேண்டுமெனில் வாங்கும் சக்தி திறனில் ஜிடிபியை கணக்கிடுங்கள். சீனா அமெரிக்காவை மிஞ்சிவிட்டது என்பது நிரூபிக்கப்படும். மீண்டும் ஆசியாவின் உலகப்பவர் நிர்மாணிக்கப்படுகிறது. மேற்கத்தியநாடுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது. 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
01 செப்,2026 - 17:44 Report Abuse
சீன அதிபருடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி பின்னே காய் குலுக்கமா காலா குலுக்குவாங்க 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
01 செப்,2026 - 16:54 Report Abuse
உலக அரசியல் தலைவர்கள் ஒன்றுகூடும்போது ஒருவரையொருவர் வாழ்த்தவும் அவரவர் நாட்டின் நலன் காக்க ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் உலக நன்மைக்கான திட்டங்களில் பங்கெடுக்கவும் மிகவும் சரியான ஒன்று கைகுலுக்குதல் அரவணைத்தல். முன்னாள் பிரதமர்களைப்போல நமது பிரதமர் நமது நாட்டுக்காகவும் மற்ற நாடுகளுக்காகவும் நடப்பு சூழ்நிலைகளுக்கேற்ப சிந்திப்பவர் உழைப்பவர். 0
0
guna - ,
01 செப்,2026 - 17:39Report Abuse
என்னடா இது... திருந்திட்டரா... 0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
01 செப்,2026 - 18:58Report Abuse
திடீர்னு நாடகம் 0
0
Aarbinms - Bangalorw,இந்தியா
01 செப்,2026 - 19:39Report Abuse
திருட்டு த்ரவிஷனையும் இத்தாலிய மாபியாவை நம்பியது போதும் என்று நீங்கள் உணர்ந்தீரோ அன்றே நீங்கள் ஞானஸ்தானம் அடைந்து விட்டீர் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement