எல்.ஐ.சி., அலுவலகத்தில் கண் பரிசோதனை முகாம்
மந்தாரக்குப்பம்: எல்.ஐ.சி.,யின் 70ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நெய்வேலி கிளை அலுவலகத்தில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ஆண்டு விழாவிற்க கிளை மேலாளர் அனுராஜ் சுரேசன் தலைமை தாங்கினார். உதவி நிர்வாக அலுவலர் வைஷ்ணவி பாலா, பெரோஸ்பாஷா முன்னிலை வகித்தனர்.
டாக்டர் சண்முகவேல் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசினார். விழாவில் அலுவலக ஊழியர்கள், முகவர்கள் கவுரவிக்கப் பட்டனர். தொடர்ந்து பாலிசிதாரர்கள், அலுவ லக ஊழியர்கள் மற்றும் முகவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.
அகர்வால் கண் மருத்துவ குழுவினர் கண் புரை, கண் நீர் அழுத்த நோய், விழித்திரை பாதிப்பு, பார்வை குறைபாடு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினர்.
காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சரவணகுமார், சுமதி, சிவப்பிரியா, வளர்ச்சி அதிகாரிகள், கீர்த்திவாசன், ஸ்ரவண்குமார், அருண்மொழிசோழன், முகவர் சங்க நிர்வாகிகள் முருகானந்தம், தர்மலிங்கம், நடராஜன், மதிவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.