ரத்தினம் குளோபல் நிகர்நிலை பல்கலையில் ஒப்பந்தம்
கோவை: இந்தோ–ஜெர்மன் புத்தாக்க மையத்தின் ஒரு பகுதியாக, ‘இந்தியா கேட்வே 2026’ நிகழ்ச்சி, ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலையில் நடந்தது.
ஏ.ஐ.சி. ரைஸ், ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலை, தென்னிந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பு, ஜெர்மன் இந்தியன் பிசினஸ் அலையன்ஸ்(GIBA), ஜெர்மன் இந்தியன் ரவுண்ட் டேபிள்–கோவை சேப்டர் இணைந்து நிகழ்ச்சியை நடத்தின.
ஜெர்மனியின் கெல்ஸ்டர்பாக் நகர மேயர் மான்பிரெட் ஒக்கெல், ரான்ஹைம் நகர மேயர் டேவிட் ரெண்டல், ஈ.டி.எல்., ஐ.பி. நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டயானா டாபர்ட், ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலை வேந்தர் மதன் செந்தில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலை மற்றும் ஜெர்மன் இந்தியன் பிசினஸ் அலையன்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் கல்வி, தொழில்முனைவு, புத்தாக்கம், தொழில்துறை ஈடுபாடு மற்றும் சர்வதேச அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் இரு நிறுவனங்களின் ஒத்துழைப்பு வலுப்படும்.