என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்

பெரியகுளம், செப். 2-

பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டியில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் என். எஸ். எஸ்., சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சரஸ்வதி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் அனிதா, சமூக அறிவியல் துறை உதவி பேராசிரியர் பிரபு முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வினோபன் துவக்கி வைத்தார். போதை மற்றும் காசநோய் இல்லாத இளைஞர்களை உருவாக்குவோம், நீர் பாதுகாப்பு, உடல் உறுப்பு தானம், குழந்தை திருமணம் விழிப்புணர்வு ஊர்வலத்தில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., மாணவர் மன்ற ஆலோசகர் ஸ்ருதி சஹானா நன்றி கூறினார்.

--

Advertisement