பந்தலுாரில் புதருக்குள் மறைந்து வரும் அரசு பள்ளி கட்டடம்; இழுத்து மூடப்பட்டதால் வீணாகும் அவலம்
பந்தலுார்: பந்தலுார் அருகே கையுன்னி பகுதியில், மூடப்பட்ட அரசு பள்ளி புதருக்குள் மறைந்து வருகிறது.
பந்தலுார் அருகே கையுன்னி சுற்று வட்டார பகுதியில், அதிகளவு பழங்குடியின கிராமங்கள் அமைந்துள்ளதுடன், பிற சமுதாய மக்கள் குடியிருப்புகள் உள்ளன.
இதனால்,போத்துக்கொல்லி பழங்குடியின கிராமத்திற்கு மத்தியில் அரசு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் துவக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது.
ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கடைசியாக பத்து பழங்குடியின மாணவர்களுடன் செயல்பட்டது.
புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பள்ளி மூடப்பட்டு மாணவர்கள் கையுன்னி அரசு துவக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். பல கல்வியாளர்களை உருவாக்கிய அரசு பள்ளி கட்டடம் புதருக்குள் மறைந்து சிதிலமடைந்து வருகிறது.
அத்துடன் பள்ளி வளாகத்தில் விஷ ஜந்துக்கள் மற்றும் வன விலங்குகளின் இருப்பிடமாகவும் மாறி உள்ளது.
இதனை சுற்றிலும் குடியிருப்புகள் அதிகளவில் அமைந்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே, இந்த பள்ளி கட்டடத்தை அரசு, பிற தேவைகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தகவல் சுரங்கம் :நாளிதழ் வினியோகிப்பவர் தினம்
-
அறிவியல் ஆயிரம் : புயல் உருவாகாத இடம்
-
ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.,க்கள் சலுகைகள் ரத்து?
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...