மதுரையில் 13 பேருக்குமாநில நல்லாசிரியர் விருது
மதுரை: மதுரை மாவட்டத்தில் இந்தாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது 13 ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இவ்விருதுக்கு 80க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். நேற்று மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்டோர் விபரம் முதன்முறையாக தபால் மூலம் சி.இ.ஓ., க்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மதுரையில் தேர்வான 13 பேர் விபரம்:
1. செ. ஜான் கென்னடி, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சத்திரப்பட்டி.
2. செ. ஹெலன் தெரசா, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வண்டியூர்.
3. செ. தனலட்சுமி, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அய்யன்பாப்பாக்குடி.
4. பா. ரேவதி, இடைநிலை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உச்சப்பட்டி.
5. நா. வித்யாவதி, தலைமையாசிரியை, டி.வி.எஸ்., மேல்நிலைப் பள்ளி, லட்சுமிபுரம்.
6. த.வெ. ராஜேஸ்வரி, தலைமையாசிரியை, சவுராஷ்டிர பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அனுப்பானடி.
7. ஜோ. இன்பென்ட் விஜய் அமிர்த விக்டர், பட்டதாரி ஆசிரியர், செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோச்சடை.
8. சா.பரமசிவம், பட்டதாரி ஆசிரியர், பாரதிதாசனார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, புதுமாகாளிப்பட்டி ரோடு.
9. கா. அன்புச்செல்வன், முதுகலை ஆசிரியர், நாடார் மேல்நிலைப் பள்ளி, தெற்குவாசல்.
10. சு.பொ. பூபதி சரவணகுமார், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எஸ். மீனாட்சிபுரம்.
11. தா.ராஜகுமார், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முத்துநாகையாபுரம்.
12. கா. தியாகு, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, கே.மீனாட்சிபட்டி.
13. ரா. அன்புச்செல்வன், பட்டதாரி ஆசிரியர், அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி, அய்யனார்குளம்.
விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தங்கள் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை என நற்சான்று பெற்று, செப்.5ல் சென்னையில் நடக்கும் ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்
-
மாநில சிலம்பம் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தேர்வு
-
மின் கசிவால் தீ விபத்து தனியார் பேக்கரி எரிந்தது
-
யு.டி.ஐ.டி. அட்டைக்கு நடத்துனர்கள் ‘நோ’ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார்
-
வரும் சீசனில் எள் விலை அதிகரிக்கும்! வேளாண் பல்கலை., கணிப்பு
-
பழங்குடியினருக்கு ‘வார்லி’ ஓவிய பயிற்சி மறைந்து வரும் கலையை மீட்கும் முயற்சி