மாநில சிலம்பம் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தேர்வு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே விளங்குளத்துாரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி இளவரசி மாநில அளவிலான சிலம்பம் ஒற்றைக்கம்பு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி இளவரசி ஒற்றைக்கம்பு போட்டியில் முதலிடம் பெற்றார்.
அக்., மாதத்தில் அரியலுாரில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.மாணவி இளவரசி, உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம், பயிற்சியாளர் முருகன் ஆகியோரை தலைமையாசிரியர் நவீன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement