பண்ருட்டி அருகே இருதரப்பு மோதல் 14 பேர் மீது வழக்கு : 2 பேர் கைது
பண்ருட்டி:பண்ருட்டி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட வழக்கில் இருதரப்பில் 14பேர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து இருதரப்பில் தலா ஒருவரை கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் எழுமலை மகன் இளங்கோவன்,34; இவர் நேற்றுமுன்தினம் தனியார் பஸ்சில் எனதிரிமங்கலம் சென்ற போது உளுந்தாம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் படிக்கட்டில் பயணம் செய்தார். அதனை இளங்கோவன் கண்டிக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிறுவன், இளங்கோவனை தாக்கினார்.
அதனை அறிந்த இளங்கோவன் நண்பர் உளுந்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் மகன் ராஜேஷ்,29; அஜித் உள்ளிட்ட 4 பேர் சிறுவன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டனர். அவர்களை சிறுவனின் தந்தையான வல்லரசு உள்ளிட்டோர் தாக்கி, ராஜேஷ் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்து கொண்டனர்.
இதுகுறித்து ராஜேஷ் மற்றும் வல்லரசு மகன் 16வயது சிறுவன் ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வல்லரசு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிந்து, வெங்கடேசன்,43; என்பவரை கைது செய்தனர். மற்ற 7 பேரை தேடிவருகின்றனர்.
மேலும், வல்லரசு மகன் 16 வயது சிறுவன் கொடுத்த புகாரின் பேரில் இளங்கோவன்,34; என்பவரை கைது செய்தனர். மற்ற 5 பேரை தேடிவருகின்றனர்.
மேலும்
-
நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்
-
மாநில சிலம்பம் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தேர்வு
-
மின் கசிவால் தீ விபத்து தனியார் பேக்கரி எரிந்தது
-
யு.டி.ஐ.டி. அட்டைக்கு நடத்துனர்கள் ‘நோ’ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார்
-
வரும் சீசனில் எள் விலை அதிகரிக்கும்! வேளாண் பல்கலை., கணிப்பு
-
பழங்குடியினருக்கு ‘வார்லி’ ஓவிய பயிற்சி மறைந்து வரும் கலையை மீட்கும் முயற்சி