பட்டா வழங்காததால் பெண் தீக்குளிக்க முயற்சி: உளுந்துார்பேட்டையில் பரபரப்பு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம்க முன்பு பட்டா வழங்காததை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டை தாலுகா பரிந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி மனைவி ராஜம், 55; விவசாயி. இவர் ஒரு ஏக்கர் நிலத்தை விற்றுள்ளார். மீதமுள்ள இடத்திற்கு வருவாய் துறை அதிகாரியிடம் பட்டா கேட்டும் வழங்கவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த ராஜம், மாலை 5.30 மணியளவில் உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடன் அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
பின் அவரை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்
-
மாநில சிலம்பம் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தேர்வு
-
மின் கசிவால் தீ விபத்து தனியார் பேக்கரி எரிந்தது
-
யு.டி.ஐ.டி. அட்டைக்கு நடத்துனர்கள் ‘நோ’ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார்
-
வரும் சீசனில் எள் விலை அதிகரிக்கும்! வேளாண் பல்கலை., கணிப்பு
-
பழங்குடியினருக்கு ‘வார்லி’ ஓவிய பயிற்சி மறைந்து வரும் கலையை மீட்கும் முயற்சி
Advertisement
Advertisement