காய்கறி விற்கும் 'த்ரோ பால்' வீரர்
ராஞ்சி: இந்திய 'த்ரோ பால்' வீரர் அமர்தீப் குமார் 29. தந்தை காய்கறி வியாபாரி. தனது 13 வயதில் இந்த விளையாட்டினை தேர்வு செய்தார். பின் இந்திய அணியில் இடம் பெற்றார். 2015ல் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதுவரை 4 தங்கம் வென்றுள்ளார்.
இருப்பினும், எவ்வித நிதி உதவி, அரசு ஒதுக்கீட்டில் வேலையும் கிடைக்கவில்லை. இதற்காக பலமுறை முயற்சித்தும் பலனில்லை.
கடைசியில் வேறு வழியில்லாத நிலையில் வாடகை கார் ஓட்டினார். தொடர்ந்து தந்தையுடன் இணைந்து, வீதியில் உட்கார்ந்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். பின்பக்கம் தான் வாங்கிய 4 தங்கப் பதக்கங்களையும் வைத்துள்ளார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்
-
மாநில சிலம்பம் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தேர்வு
-
மின் கசிவால் தீ விபத்து தனியார் பேக்கரி எரிந்தது
-
யு.டி.ஐ.டி. அட்டைக்கு நடத்துனர்கள் ‘நோ’ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார்
-
வரும் சீசனில் எள் விலை அதிகரிக்கும்! வேளாண் பல்கலை., கணிப்பு
-
பழங்குடியினருக்கு ‘வார்லி’ ஓவிய பயிற்சி மறைந்து வரும் கலையை மீட்கும் முயற்சி
Advertisement
Advertisement