ஆசிரியரை முட்டிக்கால் போட வைத்த பஞ்., செயலர் இடமாற்றம்
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, அரசு பள்ளி ஆசிரியரை முட்டிக்கால் போட வைத்த, ஊராட்சி செயலர் ராஜசேகர், 55, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பெரம்பலுார் மாவட்டம், தேனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர், கடந்த ஜூலை 20ம் தேதி வகுப்பறை கரும்பலகையில் ஆபாசமாக கருத்துப்படம் வரைந்துள்ளார்.
ஆசிரியர் கபில்தேவ் அந்த மாணவரை முட்டிக்கால் போட வைத்துள்ளார்.
இதையறிந்து பள்ளிக்கு வந்த மாணவரின் தந்தையான ஊராட்சி செயலர் ராஜசேகர், தன் மகனை முட்டிக் கால் போட வைத்த ஆசிரியர் கபில்தேவை கடுமையாக தகாத வார்த்தையால் திட்டி, முட்டிக்கால் போட வைத்துள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் அப்பள்ளியின் சக ஆசிரியர்கள் ஊராட்சி செயலர் ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரம்பலுார் கலெக்டர் ஷரண்யா அறியிடம் புகார் மனு கொடுத்தனர்.
விசாரணையில், புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததையடுத்து, மாவிலங்கை ஊராட்சி செயலராக பணியாற்றிய ராஜசேகரை கொளப்பாடி ஊராட்சி செயலராக பணியிட மாற்றம் செய்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரன் உத்தரவிட்டார்.
மேலும்
-
நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்
-
மாநில சிலம்பம் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தேர்வு
-
மின் கசிவால் தீ விபத்து தனியார் பேக்கரி எரிந்தது
-
யு.டி.ஐ.டி. அட்டைக்கு நடத்துனர்கள் ‘நோ’ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார்
-
வரும் சீசனில் எள் விலை அதிகரிக்கும்! வேளாண் பல்கலை., கணிப்பு
-
பழங்குடியினருக்கு ‘வார்லி’ ஓவிய பயிற்சி மறைந்து வரும் கலையை மீட்கும் முயற்சி