குழந்தை பெற்றெடுத்த சிறுமி 'போக்சோ'வில் வாலிபர் கைது
வெண்ணந்துார்:நாமக்கல்
மாவட்டம் ராசிபுரம், ஆண்டகளூர்கேட் பகுதியை சேர்ந்தவர், 14 வயது
சிறுமி. இவரது குடும்பத்தினர், செங்கல் சூளையில் பணிபுரிகின்றனர்.
அவர்களுடன் ஒன்றாக இருந்த, சேலம் மாவட்டம் தாரமங்கலம்,
குருக்கப்பட்டியை சேர்ந்த கைலாசம் மகன் மணி, 23, சிறுமியை
காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமானார்.
இதில் இரு குடும்பத்தினர் இடையே பிரச்னை ஏற்பட்டு, சிறுமியின் குடும்பத்தினர் தனியே வசிக்கின்றனர். நேற்று
சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர், ராசிபுரம் அரசு
மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை
பிறந்தது. சிறுமி என்பதால் மருத்துவமனை நிர்வாகம் தகவல்படி,
ராசிபுரம் மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ வழக்குப்பதிந்து,
மணியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்
-
மாநில சிலம்பம் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தேர்வு
-
மின் கசிவால் தீ விபத்து தனியார் பேக்கரி எரிந்தது
-
யு.டி.ஐ.டி. அட்டைக்கு நடத்துனர்கள் ‘நோ’ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார்
-
வரும் சீசனில் எள் விலை அதிகரிக்கும்! வேளாண் பல்கலை., கணிப்பு
-
பழங்குடியினருக்கு ‘வார்லி’ ஓவிய பயிற்சி மறைந்து வரும் கலையை மீட்கும் முயற்சி
Advertisement
Advertisement