பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி கோரி கோபியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோபி:நிலுவையில் உள்ள அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி, பாண்டியாறு, மாயாறு இணைப்பு இயக்கம், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், கோபியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். பாண்டியாறு- - மாயாறு ஒருங்கிணைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் காகுத். கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும். பாண்டியாறு - மாயாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குடிநீர் ஆதாரத்தை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement