அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும்: சட்டசபையில் பழனிசாமி எம்.எல்.ஏ., பேச்சு
திருக்கோவிலுார்: கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுாரில் உள்ள மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும் என திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ., பழனிசாமி சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில் பங்கேற்ற அவர் பேசுகையில், 'கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார் தாலுகாக்கள் திருக்கோவிலுாரில் இருந்து பிரிக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் பகுதிகளைச் சுற்றி 50 கிராமங்கள் உள்ளது.
இங்குள்ள மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி, விஷக்கடிகளுக்கான மருந்தை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும். அதேபோல் வீரபாண்டி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும்' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement