தாய், மகனை தாக்கியவர் கைது

திட்டக்குடி, செப். 4–

பேனர் வைக்கும் பிரச்னையில், தாய், மகனை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி அடுத்த குமாரையைச் சேர்ந்தவர் அப்பாதுரை மகன் மகேந்திரன், 19. இவர் அதே பகுதியில் உள்ள பச்சையம்மன் கோவில் தீமிதி திருவிழா வரும் 4ம்தேதி நடக்கிறது. இதற்காக, பேனர் வைக்க கோவிலில் இருந்த சவுக்கு கட்டையை எடுக்க சென்றார். அப்போது, அங்கு பணிபுரிந்த அதே பகுதியைச் சேர்ந்த செக்யூரிட்டி ராஜேந்திரன் என்பவர் மகேந்திரன் மற்றும் 3 சிறுவர்களை கோவிலின் உள்ளே வைத்து கேட்டை மூடினார். 

இதையறிந்த மகேந்திரன் தாய் சுமதி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், இவரது மனைவி ஜெயலட்சுமி, மகன் உத்தமராஜா,36, மருமகள் வெண்ணிலா ஆகியோர் சுமதி, இவரது மகன் மகேந்திரன் இருவரையும் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். 

சுமதி கொடுத்த புகாரின்பேரில், ராஜேந்திரன் உட்பட நால்வர் மீது, திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து உத்தமராஜாவை கைது செய்தனர். 

Advertisement