ஆசிரியர்களுக்கு காலநிலை கல்வி சான்றிதழ் வழங்கல்

வடலூர்:சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, வனத்துறை மற்றும், பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய, ஆசிரியர்களுக்கான காலநிலை கல்வி குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் வடலுாரில் நடந்தது.

நிறைவு விழாவிற்கு மாவட்ட வன அலுவலர் குருசாமி தலைமை தாங்கினார். வனச்சரக அலுவலர்கள் பசுபதி, கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் வன மண்டல முதன்மை தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி, முகாமில் பங்கேற்ற 150 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

பயிற்சியின் ஒரு பகுதியாக பிச்சாவரம் சதுப்பு நில காடுகளுக்கு களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் மற்றும், அவற்றின் கார்பன் சேமிப்பு திறன் குறித்து, ஆசிரியர்கள் நேரடியாக கண்டு உணர்ந்தனர்.

பயிற்சியில் பெற்ற அனுபவங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்த்து, ஆசிரியர்கள் காலநிலை தூதுவர்களாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் பழனி, திட்ட இணைப்பாளர் எர்சா ஜான், மற்றும் பசுமை தோழர் மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement