இறந்த பெண் குறித்து விசாரணை 

பாகூர்: முள்ளோடை சாராயக்கடை அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

புதுச்சேரி – கடலுார் சாலை முள்ளோடை சாராயக் கடை அருகே கடந்த 1ம் தேதி இரவு  சுமார் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அங்கிருந்த பொது மக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து , உயிரிழந்த அடையாளம் தெரியாத பெண் குறித்தும், அவரது இறப்பிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    

Advertisement