இதே நாளில் அன்று
செப்டம்பர் 4:
திருச்சி மாவட்டம், ஆங்கரை கிராமத்தில், தியாகராஜ அய்யர் - மங்களம் தம்பதியின் மகனாக, 1902ல் இதே நாளில் பிறந்தவர், சதாசிவம் எனும், 'கல்கி' சதாசிவம்.
பள்ளியில் படித்தபோது, கும்பகோணம் மகாமக விழாவில், சுப்பிரமணிய சிவாவின் பேச்சை கேட்டு, அவரது, 'பாரத சமாஜ்' இயக்கத்தில் சேர்ந்து, விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டார். தொடர்ந்து பாலகங்காதர திலகர், பாரதியாரின் தேசபக்தி சொற்பொழிவுகள், எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, வன்முறை வழியில் போராடிய இவர், ராஜாஜி, காந்தியின் உரைகளை கேட்டு, அகிம்சாவாதியாக மாறினார்.
சுப்பிரமணிய சிவாவின் சீடராக செயல்பட்டவர், அவரின் பாரத மாதா கோவில் கட்டும் பணிக்காக உண்டியல் ஏந்தி நிதி வசூலித்தார். கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ராஜாஜி, சென்னையில் வசிப்பதற்கு இவர் வீடு வழங்கினா ர்.
'ஆனந்த விகடன்' இதழில் இருந்து விலகிய தன் நண்பர் கிருஷ்ணமூர்த்திக்காக, 'கல்கி' வார இதழை தொடங்கி, 'பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்' உள்ளிட்ட சரித்திர நாவல்களை எழுத துாண்டினார்.
முதல் மனைவி காலமான நிலையில், கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியை மணந்தார். அவர் நடிப்பில், மீரா உள்ளிட்ட படங்களை தயாரித்த இவர், தன் 95வது வயதில், 1997, நவம்பர் 21ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்