சாலையை கூறுபோட்டு மனைகளாக்கிய கும்பலால்... அதிர்ச்சி! : வடிகாலை உடைத்தும், மரத்தை வெட்டியும் அட்டூழியம்
கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கம், விடுதலை நகர்- - ராஜம் நகர் இடையே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பயன்படுத்தி வரும் சாலையை, தனியார் சிலர் போலி வரைபடம் வாயிலாக கூறுபோட்டு மனைகளாக மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவிர, கடந்தாண்டு அங்கு அமைத்த மழைநீர் வடிகாலை உடைத்தும், மரங்களை வெட்டியும் அட்டூழியம் செய்துள்ளதாகவும், சாலையை மீட்டெடுக்கும்படியும், அப்பகுதி மக்கள், செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
சென்னை அடுத்த சோழிங்கநல்லுார் அருகில், புனிததோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, விடுதலை நகர் - -ராஜம் நகர் பகுதிகள் மனைப்பிரிவுகளாக உருவாக்கப்பட்டன.
இங்கு விடுதலை நகர் - ராஜம் நகர் இடையே, 30 அடி அகல சாலை உள்ளது. கடந்த ஆண்டு இங்கு, 1.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சாலையின் ஒரு பகுதியை பிரித்து, போலி ஆவணங்கள் தயாரித்து, ஞானசுந்தரம் என்பவரின் மனைவி மீனா பெயரில் கிரயம் செய்து ஆக்கிரமித்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த இடத்தைச் சுற்றி இரும்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட வடிகாலை உடைத்து அகற்றியதுடன், சாலையில் இருந்த, 30 ஆண்டுகள் பழமையான, 10 மரங்களையும் அரசு அனுமதியின்றி வெட்டி அகற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பகுதி மக்கள், நலச்சங்கத்தினர் கூறியதாவது:
இப்பகுதிக்கான மனைப்பிரிவு திட்டத்தில், அரசு துறைகள் அங்கீகரித்த அசல் வரைபடத்தில் இப்பகுதி, 30 அடி சாலையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இதே எண்ணில் போலி வரைபடம் தயாரித்து, 30 அடி சாலை பகுதியை ஐந்து மனைகளாக பிரித்துள்ளனர்.
இங்கு, 40 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்த, 30 அடி சாலை திடீரென எப்படி தனியார் மனைகளாக மாறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மனைப்பிரிவின் அசல் வரைபடத்தின் அடிப்படையில் இந்த சாலை பொது சொத்தாக உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பில் இருக்க வேண்டும்.
உள்ளாட்சிக்கு சொந்தமான இடம் என்பதால் தான், இங்கு ஊராட்சி ஒன்றியம், அரசு நிதியில் மழைநீர் வடிகாலை அமைத்துள்ளது. மழைநீர் வடிகாலை தனியார் சிலர் இடித்து அப்புறப்படுத்தி மனைகளாக விற்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
போலி ஆவணங்கள் தயாரித்து, மனைப்பிரிவு சாலையை ஆக்கிரமித்து, அபகரித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சாலையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அல்லாருக்கும் ஊடு வேணாமா?
இது போன்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு திருட்டு திமுக பாதுகாவலாக, அரணாக இருந்தது. இப்பொழுது ஆட்சியும் மாறி, காட்சியும் மாறிப் போச்சு.மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்