செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
சிறுபாக்கம்:மங்களூர் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் உள்ள செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, பூ போடுதல், ஊரணி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
நேற்று விடியற்காலை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து செல்லியம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்து தேர் திருவிழா துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
சுற்று வட்டார மக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement