துாய்மை பணியாளரின் தங்க மனசு

கோவை: கவுண்டம்பாளையம், ரங்கா லே அவுட் பகுதியில் சீதாலட்சுமி என்கிற ஒப்பந்த தூய்மை பணியாளர் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். குப்பையில் தங்க கம்மல் கிடந்ததை பார்த்தார்.

மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மாநகராட்சி அலுவலர்கள் விசாரித்ததில் அந்த கம்மல் அகிலா என்பவருக்கு சொந்தமானது என்று தெரிந்தது. அந்த 3 கிராம் தங்க கம்மலை, சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி அலுவலர்கள் அகிலாவிடம் ஒப்படைத்தனர். சீதாலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அகிலா நன்றி கூறினார். 

Advertisement