நாளை நடக்கிறது டாப்செட்கோ கடன் மேளா 

கோவை: பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு குறைந்த வட்டியில் தொழில், கல்வி கடன் பெறுவதற்கான டாப்செட்கோ கடன் மேளா, கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது.

டாப்செட்கோ சார்பில் ஆட்டுப்பண்ணை, ஹோட்டல், ஜவுளிக்கடை உள்ளிட்ட தொழில்களை துவங்க தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் மற்றும் வெளிநாட்டு பல்கலையில் உயர்கல்வி பயில கல்வி கடன் வழங்கப்படுகிறது.

கடன் மேளா, காலை 10.30 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடக்க உள்ளது. கடன் பெற விரும்புவோர் சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், புகைப்படம் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகிய ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

Advertisement